மாமல்லபுரம் அருகே நாளை நள்ளிரவு மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல் இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், மாமல்லபுரம் அருகே நாளை இரவு மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காரைக்காலில் இருந்து 420 கிலோ மீட்டர் தொலைவில் கிளை தென்கிழக்கு திசையில் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது.
நாளை காலை வரை தீவிர புயலாக நகர்ந்து, பின்னர் சற்று வலுகுறைந்து மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் புதுச்சேரிக்கு இடையே புயல் கரையை கடக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மாமல்லபுரத்திற்கு அருகே நாளை நள்ளிரவு அல்லது அதிகாலை மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மணிக்கு 12 கிமீ வேகத்தில் நகர்ந்து வரும் மாண்டஸ் மாலையில் வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது 65 – 85 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். வட தமிழ்நாடு, புதுச்சேரியில் மிக மிக பலத்த மழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், காஞ்சிபுரம் செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…