#BREAKING: தேர்தலில் போட்டியிட 74,416 பேர் வேட்புமனு தாக்கல்! – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட 74,416 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல் பதவியிடங்களுக்கு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கான இறுதி நாளான நேற்று வரை மொத்தம் 74,416 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், 12,838 வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.
மாநகராட்சி வார்டு உறுப்பினர், நகராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பு மனுக்கள் கடந்த 28-ஆம் தேதி முதல் இறுதி நாளான நேற்று வரை பெறப்பட்டுள்ளன. அதன்படி, மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 14,701 பேரும், நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 23,354 பேரும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 36,361 பேர் என மொத்தம் 74,416 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.