#Breaking:73-வது குடியரசு தினவிழா – தமிழகத்தில் முதல்முறையாக கொடியேற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி!

சென்னை:நாட்டின் 73-வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு மெரினாவில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றி வைக்கிறார்.தமிழகத்தில் நடைபெறும் குடியரசு தின விழாவில் முதல் முறையாக ஆளுநர் ஆர்என் ரவி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றுகிறார்.
நாட்டின் 73-வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன்படி,டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியேற்றுகிறார்.இதனைத் தொடர்ந்து,முப்படைகளின் அணிவகுப்பு, சாகசங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக,டெல்லி முழுவதும் தீவிர கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில்,குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் குடியரசு தின விழா சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நடைபெறுகிறது.அந்த வகையில்,மெரினாவில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றி வைக்கிறார்.தமிழகத்தில் நடைபெறும் குடியரசு தின விழாவில் முதல் முறையாக ஆளுநர் ஆர்என் ரவி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றுகிறார்.அதே சமயம், முப்படையினர்,காவல்துறையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பு மரியாதையையும் ஆளுநர் ஏற்கிறார்.
இதனைத் தொடர்ந்து,வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கங்கள் உள்ளிட்ட சில பதக்கங்களை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வழங்குகிறார். மேலும்,கொரோனா பரவல் காரணமாக கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.மேலும்,குடியரசு தினவிழாவை முன்னிட்டு சென்னையில் சுமார் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.குறிப்பாக,விழா நடக்கும் காமராஜர் சாலையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.