#BREAKING: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் அரசின் வழக்கறிஞர் சண்முக சுந்திரம் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
இதனிடையே, 7 பேர் விடுதலை தொடர்பாக விரைந்து முடிவெடுக்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் நேற்று கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இன்று முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.