#BREAKING: அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு செல்லும் – உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published by
பாலா கலியமூர்த்தி

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் செல்லும் என உயர்நீதிமன்றம் உத்தரவு. 

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு தீர்ப்பு வழங்கினர். அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் உள் ஒதுக்கீடு கேட்டு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

69 சதவீத இடஒதுக்கீட்டுக்குள்தான் 7.5 சதவீத ஒதுக்கீடு வரும் என்று தமிழக அரசு தரப்பில் முன்வைத்த வாதத்தை ஏற்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 7.5% உள் ஒதுக்கீட்டை 5 ஆண்டுகளுக்கு பிறகு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் போல் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் உள் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், 7.5% உள்ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் செல்லும் என உயர்நீதிமன்றம் உத்தரவை தொடர்ந்து அரசு உதவி பெறும் பள்ளிகள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். அதிமுக ஆட்சியில் மருத்துவ படிப்பில் மட்டும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“எதாவது ஒரு தொடரில் வாய்ப்பு கிடைக்கும்” …நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஷர்துல் தாகூர்!

“எதாவது ஒரு தொடரில் வாய்ப்பு கிடைக்கும்” …நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஷர்துல் தாகூர்!

மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…

54 mins ago

தமிழகத்தில் 7 மணி வரை பரவலான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்!!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…

1 hour ago

“அந்த விஷயத்துக்கு காசு கூட வாங்கல”…தனுஷ் – நயன்தாராவுக்கும் இப்படி ஒரு நட்பா?

சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…

2 hours ago

உ.பி. தீ விபத்து : உயிரிழந்த 10 குழந்தைகளுக்கு நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி, முதல்வர் யோகி!

ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…

3 hours ago

சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்துள்ளீர்களா ? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்..

சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…

3 hours ago

தமிழகத்தில் திங்கள் கிழமை (18/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…

3 hours ago