#BREAKING: அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு செல்லும் – உயர்நீதிமன்றம் உத்தரவு!

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் செல்லும் என உயர்நீதிமன்றம் உத்தரவு.
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு தீர்ப்பு வழங்கினர். அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் உள் ஒதுக்கீடு கேட்டு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
69 சதவீத இடஒதுக்கீட்டுக்குள்தான் 7.5 சதவீத ஒதுக்கீடு வரும் என்று தமிழக அரசு தரப்பில் முன்வைத்த வாதத்தை ஏற்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 7.5% உள் ஒதுக்கீட்டை 5 ஆண்டுகளுக்கு பிறகு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் போல் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் உள் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், 7.5% உள்ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் செல்லும் என உயர்நீதிமன்றம் உத்தரவை தொடர்ந்து அரசு உதவி பெறும் பள்ளிகள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். அதிமுக ஆட்சியில் மருத்துவ படிப்பில் மட்டும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024