#BREAKING: சென்னையில் 6,000 -ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு.!

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5946 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இன்று மட்டுமே 434 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், தமிழகத்தில் இதுவரை 10,108 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தமிழகத்தில் இன்று 359 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 2599 ஆக உயர்ந்தும், இன்று 5 பேர் உயிரிழந்ததால் உயிரிழப்பு 71 ஆக அதிகரித்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
வழக்கம் போல தலைநகர் சென்னையில் தான் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று மட்டுமே 309 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதில், 308 பேர் சென்னையை சார்ந்தவர்கள், ஒருவர் மாலத்தீவிலிருந்து சென்னை வந்தவர். இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,946 ஆக உயர்ந்துள்ளது.