வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில் இன்று 60% பேருந்துகள் இயக்கப்படாத நிலையில், நாளை இயக்கப்படும் என அறிவிப்பு.
விலைவாசி உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல்,பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதையும், பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வு உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இன்றும், நாளையும் தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொது வேலை நிறுத்தப் போராட்டம் இன்று காலை முதல் நடைபெற்று வருகின்றது.
சிஐடியூ,ஏஐடியூசி,யூடியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இந்த இரண்டு நாள் பொது வேலை நிறுத்த போராட்டத்தை போராட்டம் நடத்தி வருகின்றன. இதன்காரணமாக, தமிழகத்தில் இன்று காலை 8 மணி நிலவரப்படி 67% பேருந்துகள் ஓடவில்லை என்றும் 33% (5,023) பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் நாளை 60% அரசு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக்கு தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் தொமுச பொருளாளர் நடராஜன் அறிவித்துள்ளார். வேலை நிறுத்த போராட்டம் நாளை தொடர்ந்தாலும் தமிழகத்தில் 60% அரசு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் நலன் கருதி நாளை வழக்கம்போல் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டதாகவும், அத்தியாவசிய பணிகள் பாதிக்காமல் வேலைநிறுத்த போராட்டம் தொடரும் எனவும் கூறியுள்ளார். மேலும், பொதுமக்கள் நலன் கருதி சாதாரண ஊழியர்கள் வழக்கம்போல் பணிக்கு செல்வார்கள் என்றும் முன்னணி ஊழியர்கள் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் எனவும் குறிப்பிட்டார்.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…