தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் புதிதாக 5,344 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று புதிதாக 5,344 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 5,47,337 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 982 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 1,56,625 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இன்று 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,871 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவில் இருந்து இன்று 5,492பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 4,91,971 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 80,672 மாதிரிகள் பரிசோதிக்கப் பட்டுள்ளன. இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 65,55,328 ஆக உள்ளது.
மேலும், தற்போது 46,495 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை: கடந்த வாரம் முழுக்க ஏறுமுகமாக இருந்த தங்கத்தின் விலை, இந்த வாரம் தொடர்ந்து இரண்டு நாளாக இறக்கம் கண்டது.…
சென்னை : வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து இன்று பிற்பகல் புயலாக மாறும் என வானிலை…
சென்னை : நீலகிரியில் இன்று முதல் நவம்பர் 30-ம் தேதி வரை தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கிறார் குடியரசு…
வாஷிங்டன் : கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல் - ஹமாஸ் போர் காசாவில் தொடர்ந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பை…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில்…
சென்னை : வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 5:30 மணி நிலவரப்படி புயல் சின்னம்…