BREAKING:தமிழகத்தில் புதியதாக 530 மருத்துவர்கள் , 1,000 செவிலியர்கள் நியமிக்க முதலமைச்சர் உத்தரவு .!

Default Image

கொரோனா வைரசால் இந்தியாவில் 724 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 17 உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த மத்திய , மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதையெடுத்து இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக 21 நாள்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி காணொளி மூலம் அறிவித்தார்.

இந்நிலையில் இன்று காலை தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், காவல்துறை அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர். 

இதையெடுத்து தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக புதியதாக 530 மருத்துவர்கள், 1,000 செவிலியர்கள், 1,508 ஆய்வக டெக்னீசியன்களை நியமிக்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் 200 ஆம்புலன்ஸ்களை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மருத்துவபணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுபவர்கள் 3 நாள்களில் பணியில் சேரவேண்டும் எனவும் கூறியுள்ளார். 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்