#BREAKING: அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு – உச்சநீதிமன்றம் அனுமதி

Default Image

சூப்பர் ஸ்பெஷாலிட்டிபடிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கி சேர்க்கை நடத்தலாம் என அனுமதி.

தமிழகத்தில் நடப்பாண்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சூப்பர் ஸ்பெஷாலிட்டிபடிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கி சேர்க்கை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கி 15 நாட்களில் இந்தாண்டு சேர்க்கைக்கான இடங்களை நிரப்ப வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மீதமுள்ள இடங்கள் குறித்து 16-வது நாள் எத்தனை இடங்கள் நிரம்பாமல் உள்ளதோ அதனை மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசின் முடிவை எதிர்த்து கார்த்திகேயன் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கலாம் என ஆணையிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்