#BREAKING: ஐகோர்ட்டில் 5 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு!
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் 5 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்று கொண்டனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக பதாவியேற்று கொண்டனர். அதன்படி, ஸ்ரீமதி, பரத சக்கரவர்த்தி, விஜயகுமார், முகமது ஷபிக், சத்ய நாராயண பிரசாத் ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்று கொண்டனர். இந்த 5 நீதிபதிகளுக்கும் உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பி[தாவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதனிடையே, சென்னை உயர்நீதிமன்றதிற்கு புதிய நீதிபதிகளை நியமித்து இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டிருந்தார். ஸ்ரீமதி, பாரதி சக்கரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷஃபிக், சத்ய நாராயண பிரசாத் ஆகிய 5 பேர் கூடுதல் நிரந்தர நீதிபதிகளாக ஜனாதிபதி நியமித்திருந்தார். இந்த நிலையில், 5 கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக பதாவியேற்று கொண்டனர்.