#BREAKING: மாவட்ட பதிவாளர் உள்பட 5 பேர் பணியிட மாற்றம் – அமைச்சர் மூர்த்தி அதிரடி நடவடிக்கை!
சரிவர பணி செய்யாத புகாரில் சென்னை அண்ணாநகர் சார் பதிவாளர் அலுவலக அதிகாரிகள் உள்பட 5 பேர் பணியிட மாற்றம்.
சென்னை நொளம்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார். 50க்கும் மேற்பட்டோர் காத்திருந்த நிலையில், மெத்தனமாக பணி செய்த பணியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து, நொளம்பூர் சார் பதிவாளரை பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டார்.
இதுபோன்று, சரிவர பணி செய்யாத புகாரில் சென்னை அண்ணாநகர் சார் பதிவாளர் அலுவலக அதிகாரிகள் உள்பட 5 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி, மாவட்ட பதிவாளர், சார்பதிவாளர், தகவல் பதிவாளர், உதவியாளர் உள்பட 5 பேரை பணியிட மாற்றம் செய்து அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டார். அலுவலகத்தில் அமைச்சர் நடத்திய திடீர் ஆய்வில் ஆவணங்களை சரிவர பராமரிக்காதது போன்றவை தெரிய வந்ததால் நடவடிக்கை எடுத்துள்ளார்.