#BREAKING: சாத்தான்குளம் வழக்கு விசாரணைக்கு 5 மாதம் அவகாசம்!
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை விசாரிக்க கீழமை நீதிமன்றத்துக்கு கூடுதலாக 5 மாதம் அவகாசம்.
சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கை விசாரித்து முடிக்க கீழமை நீதிமன்றத்துக்கு கூடுதலாக 5 மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் நகல் கிடைத்த 5 மாதங்களுக்குள் விசாரணை நடத்தி முடிக்க கீழமை நீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக தடயவியல் சோதனை முடிவுகள் இன்னும் கிடைக்காததால் அவகாசம் தேவை என்றும் செல்போன் உள்ளிட்ட உபகரணங்களில் அழிக்கப்பட்ட விவரங்கள் கிடைத்தால் விசாரணைக்கு உதவியாக இருக்கும் என்பதால் கால அவகாசம் தேவைப்படுகிறது என சிபிஐ தெரிவித்துள்ளது.
இதையடுத்து, வழக்கில் 105 சாட்சியங்கள் சேர்க்கப்பட்டியிருக்கும் நிலையில், இதுவரை 20 சாட்சியங்களிடம் மட்டுமே விசாரணை நடைபெற்றுள்ளது என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நாள் ஒன்றுக்கு ஒருவரிடம் மட்டுமே விசாரணை நடைபெற்று வருவதாக கீழமை நீதிமன்றம் தரப்பில் தெரிவித்த நிலையில், அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் கிளை உத்தரவிட்டுள்ளது.