#Breaking:தமிழகத்தில் 5 நாட்கள் கனமழை;60 கிமீ வேகத்தில் காற்று – வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.அதன்படி,நீலகிரி,கோவை,தேனி, திண்டுக்கல்,தென்காசி,திருப்பூர்,விருதுநகர், சேலம்,நாமக்கல்,ஈரோடு ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும்,வருகின்ற 18 ஆம் தேதி தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.அதே சமயம்,மன்னார் வளைகுடா, அரபிக்கடல்,கேரளா கடலோர பகுதிகளில் மணிக்கு 40-60 கிமீ வரை காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
15.05.2022 தேதியிலிருந்து தமிழகத்தின் அடுத்த ஐந்து நாட்களுக்குகான வானிலை முன்னறிவிப்பு pic.twitter.com/o6huegaqy0
— TN SDMA (@tnsdma) May 15, 2022