#BREAKING: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்கம்.. முதல் சுற்றில் இந்தியா, ஜிம்பாப்வே மோதல்!
மாமல்லபுரத்தில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடர் தொடங்கிய நிலையில், முதல் போட்டியில் இந்தியா, ஜிம்பாப்வே மோதல்.
சென்னையை அடுத்து மாமல்லபுரத்தில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் சுற்று போட்டிகள் தொடங்கியது. செஸ் ஒலிம்பியாட் போட்டியை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், தமிழக அமைச்சர் மெய்யநாதன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் சுற்று போட்டியை துவங்கி வைக்கும் நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செஸ் ஒலிம்பியாட் தொடரில் ஓபன் பிரிவில் 188 அணிகள், பெண்கள் பிரிவில் 162 அணிகள் பங்கேற்றுள்ளனர். முதல் போட்டியில் இந்திய 1(ஏ) அணி, ஜிம்பாப்வே அணியுடன் மோதுகிறது. ஓபன் மற்றும் பெண்கள் பிரிவுகளில் இந்தியா சார்பில் தலா 3 அணிகள் பங்கேற்றுள்ளனர். முதல் சுற்று போட்டியில் தமிழக கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
நேற்று செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடந்த நிலையில், தற்போது போட்டியும் தொடங்கியுள்ளது. 11 சுற்றுகளை கொண்ட செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் அடுத்த மாதம் 9-ஆம் தேதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.