#BREAKING: 41 மாணவிகள் பாலியல் புகார்..! மதுரை அரசு மருத்துவமனை துணை பேராசிரியர் சஸ்பெண்ட்..!

மதுரை அரசு மருத்துவமனை துணை பேராசிரியர் சையது தாகிர் உசேன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் சையது தாகிர் உசேன் என்பவர் மயக்கவியல் துறை துணை பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அவர், தனது மயக்கவியல் வகுப்பின் பொழுது மாணவிகளிடம் தகாத முறையில் பேசியதாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் 41 மாணவிகள் அவர் மீது பாலியல் புகார் அளித்திருந்தனர்.
இதனையடுத்து, மாணவிகள் அளித்த புகாரின் பேரில் விசாகா கமிட்டி அமைத்து முறைப்படி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. இந்த விசாரணையில் சையது தாகிர் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக பேசியதும், பாலியல் ரீதியாக துன்புறுத்தும் படி நடந்து கொண்டதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், விசாகா கமிட்டி விசாரணை அறிக்கையை மருத்துவ கல்வி இயக்குநருக்கு அனுப்பியதை அடுத்து, துணை பேராசிரியர் சையது தாகிர் உசேன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை டீன் ரத்தினவேல் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025