#BREAKING: மேலும் 4 சிறப்பு ரயில்கள்.! முன்பதிவு நாளை தொடக்கம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு.!

Default Image

தமிழகத்தில் மேலும் 4 சிறப்பு ரயில் சேவைகளை அறிவித்தது தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன் முன்பதிவு நாளை தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே, 9 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக நான்கு சிறப்பு ரயில் சேவைகள் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரிலிருந்து தென்காசி மாவட்டம் செங்கோட்டை வரை வாரம் 3 முறை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதில், சென்னை எழும்பூர் – செங்கோட்டை இடையே செப்டம்பர் 10 முதல் வாரம் 3 முறை சிறப்பு ரயில் இயக்கப்படும்.

சென்னை – கன்னியாகுமரி இடையே செப்டம்பர் 8-ஆம் தேதி முதல் தினமும் சிறப்பு றையில் இயக்கப்படும். சென்னை – மேட்டுப்பாளையம் இடையே செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் தினமும் சிறப்பு ரயில் இயக்கப்படும். திருச்சி – நாகர்கோவில் இடையே செப்டம்பர் 7- ஆம் தேதி முதல் தினமும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று கூறியுள்ளனர். மேலும், சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்