காவிரி ஆற்றில் மூழ்கிய மாணவிகளின் உடல்களை வாங்க மறுத்து பெற்றோர்கள் சாலை மரியல்..!
காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவிகளின் உடல்களை வாங்க பெற்றோர்கள் மறுப்பு.
கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆற்றில் உயிரிழந்தவர்களின் மாணவிகளின் உடல்களை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கரூர் மாவட்டம் மாயனூர், காதவனை அருகே உள்ள காவிரி ஆற்றில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அரசு நடுநிலைப் பள்ளியை சேர்ந்த நான்கு மாணவிகள் மூழ்கி உயிரிழந்தனர்.
இதையடுத்து மீட்பு துறையினர் உயிரிழந்த தமிழரசி, சோபிகா, இனியா, லாவண்யாவின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்பொழுது மூன்று மாணவிகளின் உடல்கள் பிரேத பரிசோதனை முடிந்து பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் பெற்றோர்கள் தங்களின் கையெழுத்து மற்றும் அனுமதி இல்லாமல் உடல்களை பிரேத பரிசோதனை செய்ததாக குற்றம் சாட்டி காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பெற்றோர்களின் அனுமதியில்லாமல் பிரேத பரிசோதனை செய்ய யார் அனுமதி கொடுத்தது.? என்ற கேள்வியை முன்வைத்துள்ளனர். இதையடுத்து நான்காவது மாணவியின் உடல் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் நான்கு மாணவிகளின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர்.