#BREAKING: சென்னையில் 360 தெருக்கள் தனிமை.! சென்னை மாநகராட்சி .!

கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் 360 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 1,927 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 36, 841 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் நேற்று 1,392 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் 360 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதிகபட்சமாக ராயபுர மண்டலத்தில் 78 தெருக்களும், கோடம்பாக்கத்தில் 73 தெருக்களும் அடுத்தபடியாக திரு.வி.க. நகரில் 54 தெருக்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.