#Breaking:35 ஆண்டுகள் சிறைவாசம்…வீரப்பன் அண்ணன் உயிரிழப்பு!
வீரப்பன் அண்ணன் மாதையன் உடல்நலக்குறைவால் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.கடந்த 1989-ஆம் ஆண்டு முதல் கர்நாடகாவில் வழக்கு ஒன்றில் மாதையன்,கைது செய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் கர்நாடக சிறையில் தண்டனையை அனுபவித்த நிலையில்,அந்த வழக்கு நிறைவடைவதற்கு முதல் நாள்,தமிழக வனச்சரகர் சிதம்பரம் கொலை வழக்கில் அவர் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த கொலை வழக்கில் 35 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை பெற்று வந்த பாதையன் வர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில்,நெஞ்சுவலி ஏற்பட்டதால் கடந்த மே 1 ஆம் தேதி முதல் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில்,சிகிச்சை பலனின்றி மாதையன் உயிரிழந்துள்ளார்.