#BREAKING : கல்குவாரி குட்டையில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு..!
திருத்தணி பெரியார் நகரில் உள்ள கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 சிறுமிகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி பெரியார் நகரில் உள்ள கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 சிறுமிகள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 3 பேரும் இயற்கை உபாதை கழிக்க சென்ற போது, கைவிடப்பட்ட குவாரியில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து, மல்லிகா (65), ஹேமலதா (16), கோமதி (13) ஆகிய 3 பேரும் கல்குவாரி குட்டையில் மூழ்கி உயிரிழந்த நிலையில், 3 பேரின் உடலும் மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.