#BREAKING : காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு..!
ஈரோடு மாவட்டம், கொடுமுடி காசிபாளையம் காவிரி ஆற்றில், கொத்தளம் புதூர் மதுரை கோவிலுக்கு தீர்த்தம் எடுப்பதற்காக சென்ற போது மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோவிலுக்கு தீர்த்தம் எடுப்பதற்காக சென்ற போது, ஆழமான பகுதிக்கு இழுத்து செல்லப்பட்ட நிலையில், ஜெகதீஷ்(18), சவுத்ரி(14), சுப்புராஜ்(17) ஆகியோர் உயிரிழந்துள்ளார். ஒரு சிறுமியின் உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. மற்ற இருவரின் உடலையும் தேடும் பணியில் தீயணைப்பு துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும், போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.