#BREAKING: 2ஆம் வகுப்பு மாணவன் பலி – பள்ளி ஊழியர் கைது!
மாணவன் உயிரிழப்பு தொடர்பாக பள்ளி ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில், கைது செய்யப்பட்டார்.
சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் இன்று காலை பள்ளி வேன் மோதி 2-ஆம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் ஏற்கனவே வேன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது தனியார் பள்ளி ஊழியர் ஞானசக்தி கைது செய்யப்பட்டார். பேருந்திலிருந்து மாணவர்களை இறங்கிவிடும் பெண் ஊழியர் ஞானசக்தியையும் வளசரவாக்கம் போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே, மாணவர் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர், முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது. அதன்படி, பள்ளி தாளாளர் ஜெயசுபாஷ், பள்ளி முதல்வர் தனலட்சுமி, மாணவர்களை வேனில் இருந்து இறங்கிவிடும் ஊழியர் ஞானசக்தி மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். கொலையாகாத மரணத்தை விளைவித்தல் என்ற பிரிவில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தனியார் பள்ளியில் மாவட்ட கல்வி அதிகாரி மார்க்ஸ் விசாரணை நடத்தினார். பள்ளி வேன் மோதி மாணவர் உயிரிழந்ததை தொடர்ந்து, இன்றைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தனியார் பள்ளிக்கு மெட்ரிகுலேசன் இயக்குனர் உத்தரவிட்டிருந்தார். பள்ளி ஊழியர், தாளாளர், தலைவர் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், ஞானசக்தி கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.