#BREAKING: சாத்தான்குளம் காவல்நிலையத்தில் 27காவலர்கள் மாற்றம்.!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் சேர்ந்த பென்னிக்ஸ் , அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் உயிரிழந்த தந்தை, மகன் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு, அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலர், காவலர்கள் உட்பட 27 பேர் மற்றம் செய்யப்பட்டு புதிதாக 27 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.