சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் ஆர்த்தி ஸ்கேன் நிறுவனத்திற்கு சொந்தமான மையங்களில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர்.அதன்படி,காஞ்சிபுரம்,சென்னை வடபழனியில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் அலுவலகம் மற்றும் தலைமை அலுவலகம்,குறிப்பாக ஆர்த்தி ஸ்கேன் மையத்துடன் தொடர்புடைய மருத்துவர்களின் வீடு உட்பட பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
ஏற்கனவே,ஆர்த்தி ஸ்கேன் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் ஆய்வு நடத்தியதாக கூறப்படும் நிலையில்,வரி ஏய்ப்பு குற்றச்சாட்டின் காரணமாக ஆர்த்தி ஸ்கேன் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் நேற்று சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில்,தமிழகம் முழுவதும் உள்ள ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.அதன்படி,சென்னையில் வடபழனி,அண்ணாநகர் உள்ளிட்ட 13 இடங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 25 இடங்களில் இரண்டாவது நாளாக ஐடி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதே சமயம்,வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய ஆர்த்தி ஸ்கேன் மையத்துடன் தொடர்புடைய அலுவலர்கள்,மருத்துவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…