#BREAKING: 24 மணி நேர கொரோனா தடுப்பூசி திட்டம் தொடக்கம்..!
தமிழக அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கியது.
இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் 24 மணி நேர தடுப்பூசி திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியம் தமிழகத்தில் 55 மருவத்துவனை வளாகங்களில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடப்படும். அரசு மருத்துவ கல்லுரி மருத்துவமனை, அரசு தலைமை மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடப்படும்.
சென்னையில் ராஜீவ்காந்தி, ஓமந்தூரார் , ராயப்பேட்டை, ஸ்டான்லி, கீழ்பாக்கம் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்படும். தளர்வுகள் அளிக்கப்பட்டதால் மக்கள் அஜாக்கிரதையாக இல்லாமல் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்தார். தமிழ்நாட்டில் 4 லட்சம் பேர், கோவாக்சின் 2-வது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. அப்பல்லோ மருத்துவமனையில் 5 லட்சம் கோவாக்சின் தடுப்பூசி உள்ளது.
ஓரிரு நாட்களில் அப்பல்லோ மருத்துவமனையில் கோவாக்சின் 2-வது டோஸ் இலவசமாக போடப்படும் என தெரிவித்தார்.