அக்.13ம் தேதி இலங்கை கடற்படையால் கைதான நாகை மீனவர்கள் 23 பேர் விடுதலை என பருத்தித்துறை நீதிமன்றம் அறிவிப்பு.
இலங்கை கடற்படையால் கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி கைது செய்யப்பட்ட நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் 23 பேர் விடுதலை செய்யப்படுவர் என்று இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீடிக்கப்பட்ட காவல் முடிவடைந்ததை அடுத்து, மூன்றாவது முறையாக பருத்தித்துறை நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டன.
இதனைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 23 பேர் விடுதலை செய்யப்படுவர் என நீதிமன்றம் கூறியிருக்கிறது. 23 மீனவர்களையும் விடுதலை செய்த நீதிமன்றம் அவர்களுக்கு தலா ரூ.1000 அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது. நாகையில் இருந்து மீன்பிடிக்க சென்றவர்களை எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படை கைது செய்திருந்தது.
இலங்கை : தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கச்சத்தீவு அருகே…
குஜராத் : இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டி20 அணியில் சேர்க்கப்பட்ட முகமது ஷமி ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை. எனவே,…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாக திமுகவை விமர்சனம் செய்து வரும் நிலையில், அவருக்கு திமுக சேர்ந்த அமைச்சர்கள்…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க திட்டம் கைவிடப்பட்ட காரணத்தால் அதற்கு விழா…
டெல்லி : திருமணம், கலாச்சாரம், பண்பாடு என தொன்மை வாய்ந்த இந்திய சமூகம் தற்போது வேகமாக நகர்ந்து வரும் நவீன…
மலேசியா : சினிமாவில் ஹீரோ எப்படி தனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் வில்லனிடமிருந்து காப்பாற்றுகிறார். அதேபோல், திரைப்படங்களில் வருவதுபோல் வில்லனாக நடிக்க,…