#BREAKING: தமிழக மீனவர்கள் 23 பேர் விடுதலை – பருத்தித்துறை நீதிமன்றம்
அக்.13ம் தேதி இலங்கை கடற்படையால் கைதான நாகை மீனவர்கள் 23 பேர் விடுதலை என பருத்தித்துறை நீதிமன்றம் அறிவிப்பு.
இலங்கை கடற்படையால் கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி கைது செய்யப்பட்ட நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் 23 பேர் விடுதலை செய்யப்படுவர் என்று இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீடிக்கப்பட்ட காவல் முடிவடைந்ததை அடுத்து, மூன்றாவது முறையாக பருத்தித்துறை நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டன.
இதனைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 23 பேர் விடுதலை செய்யப்படுவர் என நீதிமன்றம் கூறியிருக்கிறது. 23 மீனவர்களையும் விடுதலை செய்த நீதிமன்றம் அவர்களுக்கு தலா ரூ.1000 அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது. நாகையில் இருந்து மீன்பிடிக்க சென்றவர்களை எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படை கைது செய்திருந்தது.