தமிழகத்தில் 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளது.
முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து தமிழகத்தில் பல்வறு மாற்றங்கள் மற்றும் நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டு கொண்டிருக்கின்றது. தற்பொழுதும் தமிழகத்தில் உள்ள 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு தமிழக தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
அதன் படி நாகை மாவட்ட ஆட்சியராக இருந்த பிரவீன் நாயர் ஊரக வளர்ச்சி மற்றும் கிராமப்புற வளர்ச்சித்துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் பத்திர பதிவு துறை இயக்குனராகவும், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி சுற்றுலாத்துறை இயக்குனராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், தமிழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணா துரை, வேலூர் மாவட்ட ஆட்சியர் ஏ.சண்முகசுந்தரம், வணிக வரித்துறை கூடுதல் ஆணையர் லட்சுமி ப்ரியா உள்ளிட்ட 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு தமிழக தலைமை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஹைதராபாத் : மாநிலம் பஞ்சகுட்டா சாலையில் நடந்த சம்பவம் ஒன்று வேடிக்கையாகவும் அதே சமயம் நெஞ்சைச் சற்று பதறவும் வைத்துள்ளது.…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 48…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த அமரன் படம், உலகளவில் ரூ.180 கோடி வசூல் செய்துள்ளதாக…
சென்னை : தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
மும்பை : கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 7 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த வருடம் பிப்ரவரி-19 ம் தேதி…
சென்னை : தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை ஆங்காங்கே பெய்து வரும் சூழலில், வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த…