#BREAKING: கல்குவாரியில் பாறை சரிந்து 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு!
பெரம்பலூர் அருகே கவுள்பாளையத்தில் செயல்படும் கல்குவாரியில் பாறை சரிந்து 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு.
பெரம்பலூர் அருகே கவுள்பாளையத்தில் உள்ள கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கல்குவாரியில் இயந்திரம் மூலம் பாறைகளை அகற்றி கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குவாரி பணியில் பாறைகளை அகற்றியபோது ஏற்பட்ட விபத்தில் சுப்பிரமணி, வினோத் ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், விபத்து ஏற்பட்ட கல்குவாரி அதிமுக ஒன்றிய செயலாளர் செல்வகுமாருக்கு சொந்தமானது என தகவல் வெளியாகியுள்ளது.