#BREAKING :+2 விடைத்தாள் திருத்தும் தேதி அறிவிப்பு.!

12-ம் வகுப்பு மாணவர்கள் எழுதிய விடைத்தாள் திருத்தும் பணிகள் வரும் 27ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவித்தார்.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காரணத்தால்பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன. இதனால், நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன.
சமீபத்தில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வருகின்ற ஜூலை 1 முதல் 15-ம் தேதிக்குள் நடத்தப்படும் என அறிவித்தார்.
இந்நிலையில், இன்று அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது, தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை 10 ஆம் வகுப்பு பொது தேர்வு நடத்தப்படும் அறிவித்தார். மேலும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் எழுதிய பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் வருகிற 27 ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவித்தார்.