#BREAKING: 1 முதல் 8ஆம் வகுப்பு பள்ளிகள் திறப்பு குறித்து 30ல் முடிவு – அமைச்சர் அன்பில் மகேஷ்

1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து 30ஆம் தேதி முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து வரும் 30ஆம் தேதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
தமிழக்தில் ஊரடங்கு 31ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. மீண்டும் ஊரடங்கு தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பள்ளி திறப்பது குறித்து முடிவுவெடுக்கப்படும் என கூறினார்.
பிற மாணவர்களுக்கும் பள்ளி திறப்பது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வெவ்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். சிலர் 1 முதல் 5 வரை வகுப்புகள் தொடங்கலாம் என்றும் சிலர் 1 முதல் 8 வரை வகுப்புகளை தொடங்கலாம் எனவும் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்ததாக குறிப்பிட்டார்.
எனவே, 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது உள்ளிட்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பான அறிக்கையை இன்று முதல்வர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறினார்.
இதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் ஊரடங்கை நீடிப்பதா? அல்லது கூடுதல் தளர்வுகள் அளிப்பதா? என்பதற்கான கூட்டம் நடந்த பிறகு மருத்துவர் நிபுணர்கள் அளிக்கும் ஆலோசனையில் அடிப்படையில் கலந்தாலோசித்து எப்போது பள்ளி திறப்பது என்ற முடிவு அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025