#BREAKING: தமிழகத்தில் இன்று கொரோனாவால் 1,875 பேர் பாதிப்பு .!
தமிழகத்தில் இதுவரை 38,716 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 1,875 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 38,716 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,407 பேர் பாதிக்கப்பட்டனர்.
தற்போது, வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 27,398 ஆக அதிகரித்துள்ளது. இன்று 1,372 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 20,705 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 23 பேர் உயிரிழப்பு, மொத்த எண்ணிக்கை 349 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனையில் 17,659 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று பாதிக்கப்பட்ட 1,875 பேரில் 38 பேர் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.