#BREAKING: தமிழகத்தில் 1515 பேருக்கு கொரோனா தொற்று.!

தமிழகத்தில் இதுவரை, 48019 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 1,515 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 48,019 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 919 பேர் பாதிக்கப்பட்டனர்.
தற்போது, வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 34,245 ஆக அதிகரித்துள்ளது. இன்று 1,438 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 26,782 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், இன்று மட்டும் 49 பேர் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 528 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 61 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.