#BREAKING: புதுச்சேரியில் நாளை முதல் 144 தடை அமல்.!
புதுச்சேரியில் நாளை முதல் மார்ச் 31 வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா பரவலை தடுக்க புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் இதுவரை புதுச்சேரியில் ஒரு மூதாட்டி பாதிக்கப்பட்டு உள்ளார்.அந்த மூதாட்டி மாஹே பகுதியில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வருகிறார்.
இன்று மாலை உடன் அனைத்து கடற்கரைகளும் மூடப்பட்டன. பொருள்கள் வாங்குபவர்கள் காலை 7 மணி முதல் 9 மணி வரையும் , மாலை காலை 6 மணி முதல் 9 மணி வரையும் வாங்கி கொள்ளலாம் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா பரவாமல் தடுக்க புதுச்சேரியில் 4 பேருக்கு மேல் சேர்ந்து செல்லக்கூடாது பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சிகளை உரிய பாதுகாப்புடன் நடத்த வேண்டும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.