#BREAKING : பப்ஜி மதனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் – நீதிமன்றம் உத்தரவு …!

யூடியூபர் பப்ஜி மதனுக்கு ஜூலை 3-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
பப்ஜி கேம் விளையாடும் போது சிறுவர், சிறுமிகளிடம் ஆபாசமாக பேசி வீடியோ பதிவிட்டு வருவதாக யூடியூபர் பப்ஜி மதன் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, பப்ஜி மதனை விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், மதன் விசாரணைக்கு ஆஜரகாமல் தலைமறைவானார். இதைத்தொடர்ந்து, யூ டியூபர் பப்ஜி மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், தர்மபுரியில் நேற்று பப்ஜி மதன் கைது செய்யப்பட்டார். அவர் நேற்று இரவு சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகம் கொண்டு வரப்ப்பட்டு இரவு முழுவதும் தீவிர விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில், இன்று சுமார் இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக சென்னை சைதாப்பேட்டையில் எடுக்கக்கூடிய குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் பப்ஜி மதன் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் , பப்ஜி மதனை ஜூலை 3 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
April 8, 2025
மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!
April 8, 2025