#BREAKING : 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியீடு…..!
12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வெளியீடு.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக்களை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, தொற்று பரவல் காரணமாக 12-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், அனைத்து மாணவர்களும் ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, 2020-2021 ஆம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு பயின்ற 8 லட்சம் மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். முதல்முறையாக தசம எண்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.பள்ளி மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை இணையதளங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
மாணவர்கள் தங்களது மதிப்பெண் குறித்த விபரங்களை,
- https://tnresults.nic.in/
- https://dge1.tn.nic.in/
- http://www.dge2.tn.nic.in/
- http://www.dge.tn.gov.in/ ஆகிய இணையதளங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
மேலும், 12-ம் வகுப்பு மாணவர்கள், பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலமாகவும் தேர்வு முடிவு அனுப்பி வைக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.