BREAKING: 5 நாள்களில் “தமிழகம் முழுவதும் 11, 565 வாகனங்கள்” பறிமுதல் .!

Default Image

கொரோனா வைரஸ் உலக நாடுகளை முழுவதும் மிரட்டி வருகிறது.இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நேற்று வரை 909 ஆக இருந்தது. இன்றைய  நிலவரபடி இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 979 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை  25 ஆக உள்ளதுகொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி  கடந்த 24 -ம் தேதி முதல் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.இதையெடுத்து அனைத்து மாநிலங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனாலும் பல மாநிலங்களில் பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை மீறி  வழக்கம் போல வெளியில் சுற்றி வருகின்றனர்.இதனால் போலீசார் அவர்களை மீது தடியடி நடத்தியும் ,கொரோனா குறித்து விழிப்புணர்வு அறிவுரை கூறியும் வீட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக தமிழகத்தில் இதுவரை  8,795 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுத்ததாகவும் செய்யப்பட்டுள்ளதாகவும் , 7,119 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் தமிழக காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றியதால் 11,565 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும்  தமிழகம் முழுவதும் 144 தடையை மீறியதாக 17,668 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்