பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் எழுத பள்ளிக்கல்வி துறை ஏற்பாடு என தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில், சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்தார். அப்போது, கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் +1 தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவித்தார்.
அதன்படி, 10-ம் வகுப்பு தேர்வுகள் ஜூன் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரையும், + 1 வகுப்பு ஒத்தி வைக்கப்பட்ட தேர்வு ஜூன் 2-ம் தேதியில் நடத்தப்படும். அதேபோல, 34, 842 மாணவர்கள் பேருந்து வசதிஇல்லாமல் கடந்த மார்ச் 24-ம் தேதி தேர்வு எழுத முடியாமல் போனது. அதனால், அந்த +2 மாணவர்களுக்கு ஜூன் 4-ம் தேதி தேர்வு நடைபெறும் என தெரிவித்தார்.
இந்நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் எழுத பள்ளிக்கல்வி துறை ஏற்பாடு என தகவல் வெளியாகியுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் போது கொரோனா பரவாமல் தடுக்க சமூக இடைவெளியுடன் மாணவர்கள் தேர்வு எழுதும் வகையில், ஒரு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…