#BREAKING: 10ம் வகுப்பு முடித்தவர்கள் ஜே.இ.இ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் – பள்ளிக்கல்வித்துறை
ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பதற்றமடையாமல் தேர்வுக்கு தங்களை தயார் செய்யலாம் என அறிவிப்பு.
தமிழ்நாட்டில் 2020-21 கல்வியாண்டில் 10ம் வகுப்பு முடித்தவர்கள் 2023 ஜே.இ.இ. தேர்வுக்கு விரைவில் விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை விடுத்த கோரிக்கை பற்றி விரைவில் தீர்வு காணப்படும் என தேசிய தேர்வு முகமை உறுதியளித்துள்ளது.
எனவே, ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பதற்றமடையாமல் தேர்வுக்கு தங்களை தயார் செய்யலாம் என கொரோனா காலத்தில் 10ம் வகுப்பு தேர்வெழுதாமல் தேர்ச்சி பெற்றோர் ஜே.இ.இ. தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல் எழுந்த நிலையில், 10ம் வகுப்பு முடித்தவர்கள் 2023 ஜே.இ.இ. தேர்வுக்கு விரைவில் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.
கொரோனா காரணமாக 2020-21-ல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தவில்லை. இதனால் கொரோனா சூழலால் தமிழ்நாட்டு மாணவர்கள் 10ம் வகுப்பு மதிப்பெண்களை பூர்த்தி செய்யாமலேயே விண்ணப்பிக்க கோரிக்கை விடுத்திருந்தனர். இதுதொடர்பாக, தேசிய தேர்வு முகமையிடம் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை கோரிக்கை விடுத்த நிலையில், தற்போது அறிவித்துள்ளது.