#BREAKING: 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வெளியானது..!

தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் தீவிரமடைந்து வந்த கொரோனா காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. இதனிடையே 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுககள் அனைத்தையும் ரத்து செய்து அரசு அறிவித்தது. இதையடுத்து இந்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை மாதத்தில் வெளியிடப்பட்டது.
இதற்கிடையில், கொரோனாவால் 10-ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 10-ஆம் மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம். மதிப்பெண் விபரம் எதுவும் இன்றி தேர்ச்சி என்று மட்டும் குறிப்பிட்டு தற்காலிக சான்றிதழ் வெளியானது.
மாணவர்கள் தங்களது மதிப்பெண்களை http://dge.tn.nin.in என்ற இணையதளங்களில் தங்களது பதிவெண்ணை பதிவேற்றம் செய்து தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 – 2020ஆம் கல்வியாண்டில் படித்த மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மூலம் மதிப்பெண் பட்டியல் மதிப்பெண்களுடன் வழங்கப்பட்டது.
ஆனால், 2020 – 2021-ஆம் கல்வியாண்டில் படித்த மாணவர்கள் பள்ளிக்கு செல்லாததால் வெறும் தேர்ச்சி என்று மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.