10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஜூன் 3-வது வாரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 24 -ம் தேதி 21 நாள்களுக்கு முதற்கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பதிப்பு அதிகரித்துக்கொண்டே சென்றதால் ஊரடங்கு மேலும் 19 நாள்களுக்கு நீடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்தியாவில் கொரோனா கட்டுக்குள் வராததால் நேற்றுடன் முடிய இருந்த ஊரடங்கு மேலும் இரண்டு வாரத்திற்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.
ஊரடங்கு காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டது. இதனால் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவிருந்த தேர்வுகள் நடத்தப்படாமல் 1 முதல் 9 வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதாமல் தேர்ச்சி என தமிழகம் உட்பட பல மாநிலங்களில் அறிவித்தது.
இந்நிலையில், தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முதற்கட்ட ஊரடங்கு பின்னர் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், மீண்டும் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் தேர்வு நடைபெறுமா..? அல்லது எப்போது நடைபெறும் என்ற கேள்வி மாணவர்கள் மத்தியில் எழுந்த நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஜூன் 3-வது வாரத்தில் நடத்த தேர்வுத்துறை முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் பொதுத்தேர்வுக்கான அட்டவணை இந்த மாத இறுதியில்வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…
குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…
சென்னை : தமிழகத்தில் இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை…