10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்வு முடிவு வெளியீடு 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு.
தமிழகத்தில் 10 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி நாளை (ஜூன் 17 ஆம் தேதி) வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 23-ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம் செய்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் தற்போது அறிவித்துள்ளது.
அதன்படி, 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 20-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை (S.S.L.C) 20.06.2022 (திங்கட்கிழமை) நண்பகல் 12.00 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னையில் வெளியிடுகிறார். பொதுத்தேர்வு முடிவுகளை மாணவர்கள் http://tnresults.nic.in, http://dge2.tn.nic.in, http://dge.tn.gov.in ஆகிய இணையதள பக்கத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.
இதுபோன்று, ஜூன் 20 காலை 9.30 மணிக்கு 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் முதல்முறையாக ஒரே நாளில் வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
சென்னை : தென் தமிழகத்தில் முதல் 'மினி டைடல் பார்க்'-ஐ கடந்த மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் திறந்து…
டெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராஃபி கோப்பைக்கான இந்திய அணியை கேப்டன் ரோஹித் ஷர்மா, தேர்வுக்குழு…
சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வரும் பன்னாட்டு புத்தகத் திருவிழாவில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்ட 30 நூல்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
சென்னை: த.வெ.க தலைவர் விஜய் பரந்தூர் செல்வதற்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில், வரும் 20-ம்தேதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம்…
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ஆம் தேதி…
இஸ்ரேல்: ஹமாஸ் உடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.…