#BREAKING: 10% இடஒதுக்கீடு செல்லும் – 3 நீதிபதிகள் தீர்ப்பு! தலைமை நீதிபதி உள்ளிட்ட இருவர் எதிர்ப்பு!

Default Image

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இட ஒதுக்கீட்டுக்கு 3 நீதிபதிகள் ஆதரவாகவும், தலைமை நீதிபதி உள்ளிட்ட இரு நீதிபதிகள் எதிராகவும் தீர்ப்பு.

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இட ஒதுக்கீடு வழக்கில் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று 4 விதமான தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, இதுதொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் ஒரு தீர்ப்பையும், மற்ற 3 நீதிபதிகள் 3 தீர்ப்புகளையும் வழங்கியுள்ளனர்.

இதில், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இட ஒதுக்கீடு செல்லும் என 5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் தீர்பளித்துள்ளனர். அதாவது, 10% இடஒதுக்கீடு இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பை, அரசியலமைப்பை மீறவில்லை, 50% உச்ச வரம்பு என்பதை 10% இட ஒதுக்கீடு மீறவில்லை என நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கியது சரி என்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.

சமூகம், கல்வியில் பின்தங்கியவர்கள் முன்னேறுவதாகவே இட ஒதுக்கீடு. அனைவரும் இலக்குகளை அடைய தேவையான கருவியாக இட ஒதுக்கீடு பயன்படுகிறது. எனவே, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு செல்லும் என நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா எம் திரிவேதி தீர்ப்பு அளித்துள்ளனர். பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத EWS இடஒதுக்கீட்டை வழங்கும் அரசியலமைப்பு 103வது திருத்தச் சட்டம் 2019இன் செல்லுபடியாகும் என்பதை நீதிபதி ஜேபி பார்திவாலாவும் உறுதியளித்தார்.

குறிப்பிட்ட சாதியில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்குவதில் எந்த விதி மீறலும் இல்லை. ஒவ்வொரு இட ஒதுக்கீட்டிற்கும் கால நிர்ணயம் தேவை என்றும் பார்திவாலா கூறியுள்ளார். ஆதாயத்திற்காக இட ஒதுக்கீடு வழங்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது சமத்துவத்திற்கு எதிரானதாக அமையவில்லை என நீதிபதி தினேஷ் மகேஸ்வரி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இந்த நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வழங்கிய 10% இட ஒதுக்கீடு செல்லும் என 3 நீதிபதிகள் தீர்ப்பளித்த நிலையில், தலைமை நீதிபதி உள்பட இருவர் எதிராக தீர்பளித்துள்ளனர். 10% இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என 5 நீதிபதிகள் அமர்வில் ரவீந்திர பட் தீர்ப்பு வழங்கியுள்ளார். அதன்படி, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கியது செல்லாது என தீர்ப்பளித்துள்ளார். நீதிபதி ரவீந்திர பட் தெரிவித்துள்ள கருத்துகளுடன் முழுமையாக ஒத்துப்போகிறேன் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

இருப்பினும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு யு லலித் பொருளாதரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்த நிலையில், 5 நீதிபதிகளில் 3 பேர் 10% இடஒதுக்கீடு வழங்கியது சரி என்றும் 2 பேர் தவறு எனவும் தீர்ப்பு அளித்தனர். இதன் காரணமாக பெரும்பான்மை நீதிபதிகள் சரி என்றதால் 10% இடஒதுக்கீடு உறுதியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்