#BREAKING: தமிழ்நாட்டில் 10 புதிய பேருந்து நிலையங்கள் – அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!
தமிழ்நாட்டில் 10 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு.
தமிழ்நாட்டில் 10 புதிய பேருந்து நிலையங்கள் கட்ட ரூ.115 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் திருப்பூர், ஓசூர், கடலூர், அரியலூர், வடலூர், வேதாரணயத்தில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்பட உள்ளன. மேலும், வேலூர், புதுக்கோட்டை, குளச்சல், பொள்ளாச்சியிலும் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.