தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கான 10.5% சிறப்பு இடஒதுக்கீடு அமலுக்கு வந்தது.
தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு பிப்ரவரி முதல் அமலுக்கு வரும் என்று நேற்று தமிழக அரசு அரசாணை வெளியிட்ட நிலையில், தற்போது உடனடியாக அமலானது.
இதனிடையே, பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவம் விநியோகம் நேற்று முதல் தொடங்கி நிலையில், ஆன்லைன் மூலமாக மாணவர்கள் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில் இன்று MBC(V) என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.
நேற்று பதிவு செய்த மாணவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த மாணவர்கள் NAME OF THE COMMUNUTY என்ற காலத்தில் திருத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
MBC-ஐ மூன்றாக பிரித்து 20% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. வன்னியர்கள் 10.5%, சீர்மரபினர் 7%, இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5% என நிர்ணயித்த நிலையில், தற்போது இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
சென்னை : இன்று ஐபிஎல் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது. முதல் போட்டி மதியம் 3:30மணிக்கு லக்னோ மற்றும் குஜராத்…
சென்னை : ஒரு காலத்தில் ஐபிஎல் தொடரில் ஒரு பலமான அணியாக பார்க்கப்பட்ட சென்னை அணி, இந்த சீசனில் பரிதாபமாக…
சென்னை : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. முதலில் பேட்டிங்…
சென்னை : ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தொடர்ந்து 5வது முறையாக தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ். 8…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…