#BREAKING: வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

Default Image

வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5% உள் ஒதுக்கீடு ரத்துக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5% உள் இட ஒதுக்கீடு ரத்துக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தன. அதனை விசாரித்த நீதிபதிகள் 10.5% உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து தீர்ப்பளித்திருந்தனர்.  இதனைத்தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் 10.5% உள் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.  தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5% உள் இடஒதுக்கீட்டை உயர் நீதிமன்றம் மதுரை கிளை ரத்து செய்திருந்தது. உயர் நீதிமன்ற கிளையின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்