#BREAKING: 10.5% ரத்துக்கு எதிரான மேல்முறையீடு – நாளை விசாரணை!

வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு ரத்துக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனு நாளை விசாரணை.
வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு ரத்துக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. வன்னியர் ஒதுக்கீடு வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டுமென தமிழக அரசு முன்னதாக உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுயிருந்தது.
அதனடிப்படையில் இந்த வழக்கானது உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீதம் இடஒதுக்கீட்டில் வன்னியர் சமூகத்தினருக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா கடந்த பிப்ரவரி மாதம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. இதற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம். நாளை மறுநாள் வழக்கு விசாரிக்கப்படும் என நீதிபதி தெரிவித்திருந்த நிலையில், நாளையே விசாரிக்கப்படும் என பட்டியலிடப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!
April 7, 2025
”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!
April 6, 2025