+1 வகுப்புக்கு மார்ச் 26-ம் தேதி நடக்க இருந்த தேர்வு ஜூன் 16-ம் தேதியும், மார்ச் 24-ம் தேதி தேர்வில் கலந்து கொள்ளாத +2 மாணவர்களுக்கு ஜூன் 18-ம் தேதி தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் மீதமுள்ள பிளஸ் 1 தேர்வு நடத்த அரசு திட்டமிட்டது. அதன்படி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 1 முதல் 12 ஆம் தேதி வரையும், பிளஸ் +1 பொதுத் தேர்வு ஜூன் 2-ஆம் தேதியும், அதேபோல கடந்த மார்ச் மாதம் 24-ஆம் தேதி நடந்த தேர்வை எழுத முடியாமல் போன பிளஸ் +2 மாணவர்களுக்கான தேர்வு ஜூன் 6-ம் தேதி நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் கடந்த வாரம் அறிவித்தார்.
இந்நிலையில், கொரோனா ஒரு காலத்தில் பொது தேர்வு நடத்துவதால் மாணவர்களின் மனநலம் பாதிக்கும் என்றும் எனவே தேர்வை ஒத்திவைக்க பல தரப்பினர் கோரிவைத்தனர். இதைதொடர்ந்து பத்தாம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்தார். பின்னர் நேற்று தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் மாயவன் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை நடைபெறும் என்றும், இதைத்தொடர்ந்து +1 வகுப்புக்கு மார்ச் 26-ம் தேதி நடக்க இருந்த தேர்வு ஜூன் 16-ம் தேதி நடத்தப்படும் என்றும் , மார்ச் 24-ம் தேதி தேர்வில் கலந்து கொள்ளாத +2 மாணவர்களுக்கு ஜூன் 18-ம் தேதி தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…